பிக்பாஸ் வீட்டில் எடிகே ஒரு நாளைக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது 98 நாட்களை கடந்த நிலையில் இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டி இருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற தற்போது பிக் பாஸ் வீட்டில் 7 போட்டியாளர்கள் உள்ளனர்.
இறுதியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் ரச்சிதா வெளியேறிய நிலையில் இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஏடிகே வெளியேறிய இருப்பதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.
அவர் பிக்பாஸ் வீட்டில் 90 நாட்களை கடந்து இருந்த நிலையில் ஒரு நாளைக்கு 16,000 முதல் 19000 வரை சம்பளம் பேசப்பட்டு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.