போதைக்கு அடிமையாகியுள்ள அஸ்வெசும பயனாளர்கள்
அஸ்வெசும சலுகைகளைப் பெறுபவர்களில் சிலர் போதைக்கு அடிமையாகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர் உபாலி பன்னிலகே தலைமையில் நடைபெற்ற கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் தொடர்பான ஆலோசனைக் குழுவின் தொடக்கக் கூட்டத்தின் போது இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு திட்டங்கள்
இதன் போது அஸ்வெசும சலுகைகளைப் பெறுபவர்களில் சிலர் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க பாடசாலை மட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய விழிப்புணர்வு திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களைப் போன்ற சமூகப் பாதுகாப்பு பொறிமுறையை அறிமுகப்படுத்துதல், மாதிரி சமூக வலுப்படுத்தும் கிராமங்கள் மூலம் 'ஸ்மார்ட் கிராமங்கள்' திட்டத்தை செயல்படுத்துதல், கிராமப்புற நுண்நிதிக் கடன்களின் சவால்களை எதிர்கொள்வது குறித்து அமைச்சர்கள் ஆலோசனைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.