குறுகிய காலத்தில் அதிக சொத்து; பியூமி ஹன்சமாலிக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
இலங்கை நடிகையும், மொடலுமான பியூமி ஹன்சமாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள், கொழும்பு பிரதான நீதவானுக்கு திங்கட்கிழமை (15) அறிவித்துள்ளனர்.

வெண்மையாக்கும் கிறீம்
225 மில்லியன் ரூபா வரியை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய செலுத்தத் தவறிய குற்றச்சாட்டின் கீழ் 'Lolia Skin Care ' என்ற சருமத்தை வெண்மையாக்கும் கிறீம்களை தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரான பியூமி ஹன்சமாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் நீதவானுக்கு அறிவித்துள்ளனர்.
மிகக் குறுகிய காலத்தில் அதிகளவில் சொத்து சம்பாதித்ததாக கூறப்படும் பியூமி ஹன்சமாலிக்கு எதிராக சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் நீதவானுக்கு அறிவித்துள்ளனர்.