மகளை தொடர்ந்து நடிகை சித்ரா தந்தையின் விபரீத முடிவால் அதிர்ச்சி
சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சின்னத்திரை நடிகை சித்ரா, வேகமாக வளர்ந்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை
இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
எனினும் பின்னர் ஹேம்நாத் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி ஹேம்நாத்தை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்நிலையில், இன்று (டிச.,31) சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மகள் தற்கொலை செய்துக்கொண்டு இறந்த நிலையில், தற்போது தந்தையும் தற்கொலையால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.