தமிழில் முன்னனி ஹீரோக்களுடன் நடித்த நடிகை மரணமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர் நலமுடன் உள்ளதாக கூறப்படுகின்றது.
தமிழில் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் , சிம்பு நடித்த குத்து, தனுஷ் நடித்த பொல்லாதவன், உள்ளிட்ட படங்களில் திவ்யா ஸ்பந்தனா நடித்துள்ளார்.
இந்நிலையில் 40 வயதான திவ்யா மரணம் அடைந்ததாக பொய்யான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனீவாவில் நலமுடன் இருக்கிறேன்
ஏராளமான கன்னட படங்களில் நடித்துவரும் ரம்யா, காங்கிரஸில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டுவருகிறார்.
இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக வதந்தி வேகமாக பரவியது.
இந்த நிலையில், தான் நலமுடன் இருப்பதாக நடிகை திவ்யா ஸ்பந்தனா கூறியுள்ளதுடன், தான் தற்போது ஜெனீவாவில் இருப்பதாகவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.