விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைத்த நடிகர் விஜய்; ஜனனி கூறிய தகவல்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவரது மனைவி சங்கீதா யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்டவர் என்பதுடன் லண்டனில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் , நடிகர் விஜய் மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து செய்ததாக வதந்தி காட்டுத் தீ போல் பரவியது. இதற்கிடையில், கீர்த்தி சுரேஷ் உடன் நடிகர் விஜய் நெருக்கம் காட்டி வருவதாகவும், லியோவில் த்ரிஷாவுடன் நெருக்கம், டேட்டிங் என்றெல்லாம் பேசப்பட்டது.
ஜனனியிடம் மனைவி குறித்து பேசிய விஜய்
இதுவே விஜயின் விவாகரத்திற்கு காரணமாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், லியோவில் நடித்துள்ள பிக்பாஸ் புகழ் யாழ்ப்பாண ஜனனி அளித்த பேட்டி ஒன்றில், செட்டில் நடிகர் விஜய் தன்னிடம் வந்து பேசும் போது,
தனது பேச்சை பார்த்து விட்டு, என் வைஃப் அவரோட சிஸ்டர்ஸ் மாதிரியே பேசுறீங்க. என் வைஃப்பும் ஜாஃப்னா தான் தெரியுமா? என்றார். அதோடு நடிகர் விஜய் செம சைலன்ட்டாக இருப்பார்.
ரொம்ப அமைதியா பேசுவார் எனத் தெரிவித்துள்ளார். விஜய் தனது மனைவியை குறித்து ஜனனியிடம் பேசியிருப்பதால் விவாகரத்து என பரவிய செய்தி வதந்தி என தெரியவருகிறது.