இலங்கை மின்சார சபைக்கு 8 கோடி ரூபா நஷ்டம் !
சட்டவிரோத மின்சாரத்தால் 08 மாதங்களில் சுமார் 8 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
ஒரு சிலர் மின் மானிகளை சட்டத்திற்கு முரணாக மாற்றியமைத்ததாலும் மின்பாவனைகளை குறைக்கும் வகையில் மின்மானிகளுடன் வேறு சாதனங்களை பொறுத்தியதாலும் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
1,041 முறைப்பாடுகள்
அதேவேளை கடந்த எட்டு மாதங்களில் சட்டத்திற்கு முரணான மின்மானி மாற்றங்கள் தொடர்பாக 1,041 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
மின் கம்பிகளில் பல்வேறு சாதனங்களை பொருத்தி மின்சாரம் பெற்றமை தொடர்பில் 81 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தள்ளது.
இது தொடர்பில் இனங்காணப்படுகின்ற நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி , அவர்களிடமிருந்து 36 இலட்சத்து,95 ஆயிரத்து 500 ரூபா அறவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.