ஈழத்தமிழ் பெண்ணை ஏமாற்றினாரா நடிகர் ஆர்யா; பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

cinema actor srilankan german arya
By Sulokshi Jul 29, 2021 04:52 PM GMT
Sulokshi

Sulokshi

Report

நடிகர் ஆர்யாவின் புதிய படங்களை வெளியிட அனுமதிக்க கூடாது என்று ஜெர்மனியை சேர்ந்த ஈழத்தமிழ் பெண், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிக்க சிபிசிஐடி பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தன்னை  திருமணம் செய்து கொள்வதாகக் ஆசை வார்த்தை கூறி மோசடி செய்ததாக நடிகர் ஆர்யா ஜெர்மனியை சேர்ந்த ஈழத்தமிழ் பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

அதோடு கொஞ்சம் கொஞ்சமாக 71 லட்சம் ரூபாயை வெஸ்டர்ன்யூனியன் மணி டிரான்ஸ்பர் மூலம் பணம் பெற்றுக் கொண்டு திருமணம் செய்து கொள்ளாமலும், நடிகை சாயிஷாவைத் திருமணம் செய்து கொண்டு தனது பணத்தை திருப்பித் தராமலும் மோசடி செய்ததாக ஜெர்மனி சுகாதாரத் துறையில் பணிபுரியும் ஈழத்தமிழ் பெண்ணான வித்ஜா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை பெருநகர காவல்துறையில் புகார் செய்திருந்தார்.

தன்னிடம் ஆர்யா பணம் பெற்றதற்கு ஆதாரமான பணபரிவர்த்தனை ஆவணங்கள், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஆர்யா வாட்ஸ்அப்பில் வாக்குறுதி அளித்த சாட்டிங் விவரங்கள் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பில் சென்னை பொலிசார் வழக்கை விசாரித்து வந்த நிலையில், நீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில் இந்த புகார் குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், ஜெர்மனியில் இருந்தவாறே, சென்னை மெஜஸ்டிக் லா பார்ம் வழக்கறிஞர் ஆனந்தன் மூலமாக , ராஜபாண்டியன் என்பவரை பவர் ஆப் அட்டர்னியாக நியமித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை வித்ஜா தாக்கல் செய்தார் .

அதில் ஆர்யா தன்னிடம் மோசடி செய்து வாங்கிய பணத்தை, அவர் நடித்துள்ள சார்பட்டா பரம்பரை, மலையாளப்படமான ரெண்டகம், ஒட்டு மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்களுக்கு பயன்படுத்தி உள்ளதாக குற்றஞ்சாட்டி இருந்தார். எனவே இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி பொலிசார் முடிக்கும் வரை மேற்கண்ட படங்களை வெளியிட அனுமதிக்க கூடாது என்றும் தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வித்ஜாவின் புகார் தொடர்பான விசாரணை குறித்த விவரங்களை ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே ஈழத்தமிழ்ப்பெண் வித்ஜாவின் புகாரை சில அழுத்தம் காரணமாக சிபிசிஐடி காவல்துறையினர் கிடப்பில் போட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுவதாக அவரது வழக்கறிஞர் ஆனந்தன் தெரிவித்தார்.

இதேவேளை ஈழத்தமிழ்ப்பெண்ணின் இந்த புகார் தொடர்பாக நடிகர் ஆர்யா தரப்பில் இருந்து எந்த ஒரு மறுப்பும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US