இவரை போல் என்னால் நடிக்க முடியாது! உண்மையை கூறிய நடிகர் அருள்நிதி
தமிழ் சினிமாவில் தமது இயல்பான நடிப்பினால் முன்னெறி வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகர் அருள்நிதி.
இவர் தமிழில் பிரபல இயக்குநரான பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்.
இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ஆக்ஷன் த்ரில்லர் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதுவரை இவரது நடிப்பில் வெளியான படங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் வெளியான படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக டி பிளாக், டைரி, தேஜவு உள்ளிட்ட படங்கள் திரைக்கு வரவுள்ளன. இவர் அண்மையில் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் போன்ற படங்களைத் தேர்ந்தெடுத்து என்னால் நடிக்க முடியாது. அவருடைய படங்களில் கதை, ஆக்ஷன், எமோஷன், காமெடி என அனைத்தும் கலந்து இருக்கும்.
அப்படியான படங்களில் எனக்கு நடிப்பது மிகவும் சிரமம். ஆக்ஷன் த்ரில்லர் படங்கள் தான் எனக்கு சுலபமாக இருக்கிறது. படத்தில் கதை சில இடத்தில் அடி வாங்கினாலும் அந்த இடங்களில் சிவகார்த்திகேயன் ஸ்கோர் செய்து படத்தை தூக்கி நிறுத்தி விடுவார் என அருள்நிதி கூறியுள்ளார். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.