நாட்டை வழமைக்கு கொண்டு வரும் செயற்பாட்டு தொடர்பில் பிரதமர் ஹரிணி வலியுறுத்து
அனர்த்த நிலைமைக்குப் பின்னர் நாட்டை வழமைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டிற்கு சரியான தரவுகளைப் பெற்றுக் கொள்வது அவசியம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
குறித்த தரவுகளை சேகரிப்பதற்கு மக்களின் பூரண ஒத்துழைப்புடனான முறையான பொறிமுறை அவசியம் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி திட்டங்களை உரிய முறையில் நிறைவு செய்ய முடியாமைக்கு, அதனோடு தொடர்புடைய தரவுகளை ஒரு இடத்தில் சேமிப்பதற்கான பொறிமுறை இல்லாமையே காரணம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் கிராம மற்றும் மாவட்ட மட்டத்தில் சரியான தரவுகளைச் சேகரிப்பதற்கான பொறிமுறையை தயாரிப்பது, தற்போதைய முக்கிய தேவையாக உள்ளது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.