யாழ்.மாவட்ட பல பிரதேச செயலர்களுக்கு அதிரடி இடமாற்றம்!
யாழ்.மாவட்டத்தில் பல பிரதேச செலர்களுக்கு அதிரடி இடமாற்றத்தை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வழங்யுள்ளது.
அதன்படி, யாழ்.பிரதேச செயலாளர் சா.சுதர்சன் வவுனியா பிரதேச செயலகத்திற்கும், மாவட்ட மேலதிக அரச அதிபர் ( காணி) முரளிதரன் முல்லை மாவட்டச் செயலகத்திற்கும், நல்லூர் பிரதேச செயலாளர் எழிலரசி கிழக்கு மாகாண சபைக்கும்,
தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி யாழ்.பிரதேச செயலகத்திற்கும் தற்போதைய வவுனியா பிரதேச செயலாளர் கமலதாசன் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கும் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி கோப்பாய் பிரதேச செயலகத்திற்கும்,
கோப்பாய் பிரதேச செயலாளராக பணியாற்றும் சுபாஜினி மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கும் சங்கானை பிரதேச செயலாளர் கிருஸ்னவதனா மாவட்டச் செயலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
மேலும் இந்த இடமாற்றம் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.