மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை
நாட்டுக்கு தேவையான மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த மசகு எண்ணெய் தொகை கிடைக்கப்பெற்றவுடன் அனல் மின் உற்பத்தி நிலையங்கள் எவ்வித தடையும் இன்றி இயங்கும் என்று வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் நாட்டில் எரிபொருள் நெருக்கடி காணப்படுகிறது என்றால் அதனை துறையுடன் தொடர்புடைய அமைச்சர் எதிர்கொள்ள வேண்டும்.
அதனை விடுத்து எரிபொருளைப் பெறுவதற்கு பணம் இல்லை என்று கூறிக் கொண்டிருப்பது பொறுத்தமற்றது. முன்னாள் அமைச்சர் இதனையே செய்து கொண்டிருந்தார்.
முன்னாள் வலுசக்தி அமைச்சர் எதிர்வரும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு போதுமானளவு எரிபொருளே காணப்படுகிறது என்று தினந்தோரும் ஊடகங்களிடம் தெரிவித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் நாம் அந்த சவாலை ஏற்று அதற்கேற்ப செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
தமிழ் - சிங்கள புத்தாண்டை அண்மிக்கும் போது எரிபொருள் வரிசை நிறைவுக்கு வரும். மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மசகு எண்ணெய் கிடைக்கப் பெற்றவுடன் அனல் மின் உற்பத்தி நிலையங்கள் எவ்வித தடையும் இன்றி இயங்கும்.