புலம்பெயரும் மக்கள் தொடர்பில் பிரான்ஸ் பிரதமர் எடுத்த அதிரடி முடிவு
பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸின் (Liz Truss) முதல் அடியே சறுக்கியுள்ளது. அவருக்கு மட்டுமல்ல மொத்த பிரித்தானியாவுக்குமே இடியாகியுள்ளது.
தவளை தன் வாயால் கெடும் என்பது போல தேவையில்லாமல் வாயை கொடுத்து பிரான்ஸிடம் வாங்கி கட்டியுள்ளார்.
முன்னாள பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) பிரானஸுடன் ஏற்படுத்திய சட்டவிரோத அகதிகளை கட்டுபடுத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்றை பிரான்ஸுடன் ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டுவந்தார்கள். ஆனால் அதை ஒரே வார்த்தையில் கெடுத்து விட்டார்.
பேட்டி ஒன்றில் பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) உங்களுக்கு எதிரியா நண்பரா என கேட்கப்பட்ட போது அது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சொல்லியுள்ளார்.
இதனால் பிரான்ஸ் தரப்புக்கு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இதன் பின்விளைவாக பிரித்தானியாவுடன் ஏற்படுத்த இருந்த ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டுவிட்டு பிரான்ஸ் தன் வேலையை பார்க்க போய்விட்டது.
சட்டவிரோத புலம்பெயர்வை கட்டுபடுத்துவது இனி வரும் காலங்களில் மிகபெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரித்தானியா இவ்வாறு தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுள்ளது.