யாழில் தாய் தந்தையின் கொடூர செயலால் சிறுமி எடுத்த அதிரடி முடிவு
தாய் தந்தையர்கள் தன்னை சித்திரவதை செய்கின்றனர் என சிறுமியொருவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
மதுபோதையில் வரும் தந்தை,தாயிடம் சண்டை பிடிப்பதாகவும்,இருவராலும் வீட்டில் நிம்மதி இல்லையென அந்த 12 வயது சிறுமி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த குறித்த சிறுமியின் தந்தை மதுபோதையில் வந்து தாயாருடன் தினமும் சண்டை பிடிப்பதால்,தன்னுடன் ஒவ்வொருநாளும் வாக்குவாதமும், சண்டையும் ஏற்படுவதாக கூறி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
மேலும் 7 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயது சிறுமி தினமும் தந்தையின் சித்திரவதை பொறுக்க முடியவில்லை என கூறிள்ளார்.
குறித்த சிறுமி வீட்டின் மூத்த பிள்ளை எனவும் இவரை விட இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் பொலிஸாரின் முரண்பாட்டில் தெரியவந்துள்ளது.