ஜனாதிபதி உத்தரவைத் தொடர்ந்து யாழ் வலி வடக்கில் காணி விடுவிப்புக்கு நடவடிக்கை

Jaffna Sri Lankan Peoples Northern Province of Sri Lanka Ramalingam Chandrasekar
By Sahana Sep 03, 2026 05:28 AM GMT
Report

யாழ் வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகள் ஒரு தொகுதியினை இம்மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக கடத்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு

கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு

அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதி பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் எப்போது காணி விடுவிப்பு சாத்தியம் என அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் காணி விடுவிப்பு தொடர்பில் எமது அரசாங்கம் ஏற்கனவே கூறிய வாக்குறுதியான மக்களின் காணி மக்களுக்கே என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்து பயணித்து வருகிறது.

ஜனாதிபதி உத்தரவைத் தொடர்ந்து யாழ் வலி வடக்கில் காணி விடுவிப்புக்கு நடவடிக்கை | Action Taken For Land Release Jaffna Valley North

அண்மையில் ஜனாதிபதி அனுர தலைமையில இடம் பெற்ற பாதுகாப்பு உயர் கூட்டத்தில் வலி வடக்கு பகுதியிலுள்ள விடுதிக்கப்படாத காணிகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கியிருந்தார்.

அதன் அடிப்படையில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள பொது மக்களின் காணிகளை படிப்படியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இம்மாதம் செப்டம்பர் இறுதி பகுதியில் வலி வடக்கு பகுதியில் உள்ள ஒரு தொகுதி காணிகளை மக்களிடம் கையளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.

எமது அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின் நாட்டில் ஊழல் கலாச்சாரம் போதை ஒழிப்பு போன்ற விடயங்கள் கடந்த காலங்களை விட கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்.

நாட்டை அழிவு பாதையில் கொண்டு சென்ற ஒரு கூட்டத்தை நாட்டு மக்கள் விரட்டியடித்துள்ள நிலையில் மீண்டும் அந்தக் கூட்டம் நாட்டை குழப்புவதற்கு எத்தனித்துக் கொண்டிருக்கிறது.

நாட்டை குழப்பம் நடவடிக்கையில் மக்களால் துரத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களிடம் ஆசி பெற்ற போதைப் பொருள் பின்னணியில் செயற்பட்டுபவர்களும் குழப்பம் விளைவிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாங்காள் அவற்றை கண்டு அஞ்சப்போவதில்லை மக்கள் அளித்த ஆணையை பொறுப்பேற்ற எமது தோழர் அனுரா குமார மக்களின் தோழராக எந்த சவாலையும் வெற்றி கொள்ளும் தலைவனாக செயற்பட்டு வருகிறார்.

நாட்டு மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் ஆட்சி அதிகாரத்தை இழந்த கும்பல் நாட்டை மீண்டும் அதல பாதாளத்துக்கு கொண்டு செல்வதற்காக மக்களை இனவாத நீதியாக தூண்டிவிடும் செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள்.

இந்த செயற்பாடுகளில் தமிழ் அரசியல்வாதிகளும் விதிவிலக்கு அல்ல மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு வழங்கிய பின்னரும் தமது அரசியல் சுயலாபங்களுக்காக மக்களை அழைத்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

ஜனாதிபதி உத்தரவைத் தொடர்ந்து யாழ் வலி வடக்கில் காணி விடுவிப்புக்கு நடவடிக்கை | Action Taken For Land Release Jaffna Valley North

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கு பற்றிய நல்லாட்சி அரசாங்கத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு எதிராக போராட்டம் நடத்த முடியாது என கூறினார்கள்.

அவ்வாறு போராட்டம் நடாத்தினால் நல்லாட்சி அரசாங்கம் குழப்பி விடும் என கூறிய தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என தங்களைத் தாங்கள் கூறுபவர்கள் தற்போது காணி விடுவிப்பு தொடர்பில் கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் தொடர் போராட்டம் நடாத்தப் போகிறோம் என கூறுகிறார்கள்.

இது அவர்களின் வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகவே பார்க்க முடியும் மக்கள் மீது கரிசனை கொண்டவர்கள் அல்ல.

மக்களால் கொண்டுவரப்பட்ட இந்த ஆட்சியை மக்கள் தான் பாதுகாக்க வேண்டும் நாட்டு மக்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை மக்களால் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் இல்லையேல் மீண்டும் நாடு இருண்ட யுகத்தை நோக்கி தள்ளப்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஆகவே காணி விடுவிப்பு மற்றும் ஏனைய மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் நாம் அக்கறையுடன் செயல்பட்டு வரும் நிலையில் சில தாமதங்கள் ஏற்பட்டாலும் அதனை உரிய முறையில் நிறைவேற்றுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

நிலக்கரி பற்றாக்குறை தொடர்பில் வலுசக்தி அமைச்சரின் அறிவிப்பு

நிலக்கரி பற்றாக்குறை தொடர்பில் வலுசக்தி அமைச்சரின் அறிவிப்பு

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US