போதைப்பொருள் பயன்படுத்திய 11 வயது சிறுவன் ; வைரலான காணொளியால் எடுக்கப்பட்ட நடவடிக்கை
11 வயது சிறுவன் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற காணொளி ஒன்று, சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து இலங்கை பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த காணொளியை அடுத்து சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கைகள்
இதன்படி, பிரதி பொலிஸ் மா அதிபர் தர்ஷிகா குமாரியின் அறிவுறுத்தலின் பேரில்,பொலிஸ் அதிகாரிகள் செப்டம்பர் 18 அன்று கனேமுல்ல பகுதியில் உள்ள சுமேதா மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் குறித்த சிறுவனைக் கண்டறிந்தனர்.
அத்துடன், பாதுகாப்பற்ற சூழலில் இருந்த அந்தச் சிறுவன் பாதுகாப்புக் காவலில் எடுக்கப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவன், அவரின் தாயாருடன் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவரது நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.