யாழுக்குள் புகுந்த யானைகளை விரட்டியடிக்க நடவடிக்கை ; மக்கள் அவதி
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதிகளில் அண்மையில் யானை தாக்குதலால் சேதமடைந்த பகுதிகளை நாடாளுமன்ற உறுப்பினரும், வடமராட்சிக் கிழக்கு அபிவிருத்தி குழு தலைவருமான றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி இன்றைய தினம் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களோடு உரையாடிய ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனத்திணைக்களம் போன்றவர்களோடு பேசி யானைகளை விரட்டியடிப்பதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் யானைகள் திசை மாறி வடமராட்சி கிழக்கு பகுதிக்கு வந்துள்ளதகவும் அவர் தெரிவித்தார்.
இதில் வடமராட்சி தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் சாம், பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினர்களான பரிதா ஜெகதீஸ், கோ.கலைச்செல்வன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை நிச்சியவெட்டை கேவில் வீதி திருத்த வேலைகளையும் பார்வையிட்ட ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி கிரவல் பிரச்சனை காரணமாக கால தாமதமாகியிருந்த குறித்த வீதி திருத்த பணிக்கு சம்மந்தப்பட்டவர்களுடன் பேசி உடனடியாக கிரவல் பெற்றுக்கொள்ள நடவடிக்கையையும் மேற்கொண்டார்.