இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை!
இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனை குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 27 ஆம் திகதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனை குழு அமைக்கப்படும் என்கிற அறிவிப்பினை தமிழக முதலமைச்சர் மு. க . ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
அதன்படி சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர் மஸ்தான் தலைமையில் இந்த குழு அமைக்கப்படுவதாக இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக்குழு இலங்கை தமிழர் முகாம்களில் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கல்வி & சமூக பாதுகாப்பிற்கு உதவிக்கு வகை செய்தல், குடியுரிமை & இலங்கைக்கு விரும்பி செல்லுதல் ஆகிய 3 அம்சங்களை உள்ளடக்கி செயல்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர் மஸ்தான் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி துணைத்தலைவராகவும், மனுராஜ் சண்முகசுந்தரம் உள்ளடக்கிய 20 பேர் கொண்ட குழுவாக இது செயல்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.