கொரோனா குழு கூட்டத்தில் ஜனாதிபதி விடுத்த அதிரடி பணிப்புரை!
இலங்கை முழுவதும் கொரோன தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கு செலுத்தபட்டுள்ள நிலையில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மூன்றாவது டோஸ் நவம்பர் முதலாம் திகதியிலிருந்து செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தகுதியுடைய அனைத்து பிள்ளைகளுக்கும் இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசி
- மாகாணத்துக்குள்ளான புகையிரத போக்குவரத்து சேவை திங்கட்கிழமையில் இருந்து ஆரம்பம்
- மாகாணங்களுகிடையிலான புகையிரத போக்குவரத்துச் சேவை நவம்பர் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்
- மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடையை 31ஆம் திகதிக்குப் பின்னர் நீக்குவதற்கு அவதானம்
சுகாதாரம், பாதுகாப்பு, விமான நிலையம் மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஈடுபடுவோருக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மூன்றாவது டோஸ் ஃபைசர் தடுப்பூசியை (Pfizer Vaccine) நவம்பர் முதலாம் திகதியிலிருந்து செலுத்த ஆரம்பிக்குமாறு இன்று (22) பிற்பகல் கோவிட் தடுப்பு விசேட குழுவுடன் காணொளி தொழில்நுட்பத்தின் மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, (Gotabaya Rajapaksa) சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இதேவேளை எதிர்வரும் முதல் மாகாணங்களுக்குள்ளான புகையிரத போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும். மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை நவம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படுவதோடு புகையிரத பயணச் சீட்டை பெற்றுக்கொண்டுள்ள பயணிகள் மாத்திரம் முதலாம் கட்டத்தின் கீழ் பயணிக்க அனுமதி வழங்குவதற்கு கொரோனா குழு பரிந்துரை செய்துள்ளது.