வெளிநாட்டில் உள்ள 7 அமைச்சர்கள் தொடர்பில் அதிரடி தீர்மானம்
வெளிநாட்டில் உள்ள 7 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் செயலாளருக்கு இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை (21) நடைபெறவுள்ளமையினால் குறித்த நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலாநிதி பந்துல குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, மனுஷ நாணயக்கார, மதுர விதானகே மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட 7 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.