வெளிநாட்டவரை அவமானப்படுத்தி விரட்டிய வியாபாரி ; நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுக்கடை பகுதியில் உள்ள உணவு பொருட்கள் வாங்குவதற்காக வந்த வெளிநாட்டு நபரை அவமானப்படுத்தி மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
50,000 ரூபாய் ரொக்க பிணை மற்றும் 10 லட்ச ரூபாய்க்கான சரீர பிணை அடிப்படையில் அபராதம் செலுத்துமாறு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பு அளுத்கடை பகுதியில் உள்ள வீதி உணவகம் ஒன்றில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவர் அவமானப்படுத்தி துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரை பொலிஸார் நேற்று (16) கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை இன்று பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
வெளிநாட்டவர் ஒரு கொத்து ரொட்டியின் விலையைக் கேட்டபோது, 1,900 ரூபாய் என்று கூறியபோது வெளிநாட்டவர் அதை வாங்க மறுத்ததாகவும், கடைக்காரர் அவரை மிரட்டியதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவிவருவதுடன், அந்த காணொளியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு 12 பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய நபர் மீதே இவ்வாறு வழக்கு தாக்கல் பதிவு செய்யப்பட்டுள்ளது.