FIFA அமைப்பின் அதிரடி அறிவிப்பு; ரசிகர்கள் ஏமாற்றம்!
இம்முறை FIFA உலகக்கிண்ண காற்பந்து போட்டித் தொடரில் போட்டி இடம்பெறும் கட்டாரின் 8 மைதானங்களிலும் மதுபானம் விநியோகிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை FIFA அமைப்பு விடுத்துள்ள நிலையில் ரசிகர்களுக்கு இது பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.
2022 FIFA World Cup
உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி 2022 FIFA World Cup ,கத்தார் நாட்டில் நாளை மறுதினம் (20( ஆரம்பமாகிறது.
போட்டி டிசம்பர் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கத்தார் நாட்டு அரசு செய்து உள்ளது.முதல் போட்டியில் கட்டார் மற்றும் ஈக்வடோர் அணிகள் மோதவுள்ளன.
ஆரம்ப நிகழ்ச்சி மற்றும் முதல் போட்டி அல் பைத் அரங்கில் நடைபெறும்.
இந்ந்லையில் உலக கிண்ண போட்டியில் விளையாடுவதற்காக ஒவ்வொரு நாட்டு அணியும் கத்தார் நாட்டுக்கு வருகை தந்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.