பெண்ணுடன் தவறான உறவு: நோயாளி மீது ஆசிட் வீசிய கணவன்! இலங்கையில் சம்பவம்
பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற வந்த நோயாளி ஒருவர் மீது ஆசிட் வீசியதில் நோயாளி உட்பட 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாவனெல்ல பிரதேசத்தில் இருந்து வந்த நோயாளர், அந்த பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவருடன் தவறான தொடர்பில் இருந்துள்ளார்.
அந்தப் பெண்ணின் கணவனே இவ்வாறு அசிட் வீசியுள்ளார்.
அசிட் வீச்சு நடத்திய நபரை பேராதனை போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் இணைந்து பிடித்து பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமில் ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய பேராதனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் விஜித் விஜேகோன் தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.