சோகத்தில் முடிந்த திருமண வரவேற்பு; மணப்பெண் வீட்டில் பெரும் துயரம் ; பறிபோன உயிர்கள்
கம்பஹா மகலேகொட - நைவல வீதிக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு குடும்பத்தினருடன் வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மணமகளின் சகோதரரும், பாட்டியும் உயிரிழப்பு
விபத்தில் உயிரிழந்தவர்களில் வாகனத்தைச் செலுத்திச் சென்ற மணமகளின் சகோதரரும், அவரின் பாட்டியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்ற நேரத்தில் மணமகளின் பெற்றோர் உட்பட மொத்தம் ஒன்பது பேர் வாகனத்தில் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகன ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் வாகனம் ஓட்டியதே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.