சுவிஸ்லாந்தில் இலங்கையைச் சேர்ந்த குடும்ப ரகசியம் வெளிச்சம் ; ஊடகங்களுக்கு மனைவி அனுப்பிய காணொளி
சுவிஸ்லாந்தின் ஜெனிவாவில் வசித்து வரும் மட்டக்களப்பைச் சேர்ந்த 52 வயதுடைய தேவநேசன் என்பவருக்கு எதிராக, அவரது மனைவி நகைகள் மற்றும் பணம் காணாமல் போனதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மனைவி வழங்கிய தகவலின்படி, தனது மற்றும் தனது இரண்டு மகள்களுக்குச் சொந்தமான சுமார் 60 பவுண் நகைகள் மற்றும் 50,000-க்கும் அதிகமான சுவிஸ் பிராங்குகள் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இந்தப் பணம் மற்றும் நகைகள், மன்னார் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஜெஸ்மி என்ற பெண்ணுக்கு கணவரால் வழங்கப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், கணவரின் கைபேசியில் இருந்த சில தனிப்பட்ட காணொளிகளை அவர் கண்டுபிடித்ததன் பின்னர் குடும்பத்தில் கடும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர், வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் சேமிப்பு பணம் காணாமல் போனதை அவர் கவனித்துள்ளார்.
இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, மனைவி தாக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் கணவர் மனைவி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளிடமிருந்து தற்காலிகமாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க முடியுமா என்பது குறித்து தற்போது தாம் சில சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாகவும் மனைவி குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.