இரு இளைஞர்களை காவுகொண்ட விபத்து
அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ – யக்கல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கலென்பிந்துனுவெவ பகுதியை நோக்கிப் பயணித்த உந்துருளி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து இழுபட்டுச் சென்றதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவரும் காயமடைந்து யக்கல்ல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் 20, 31 வயதுடைய கலென்பிந்துனுவெவ மற்றும் அங்குருவாதொட்ட பகுதிகளை வசிப்பிடமாகக் கொண்ட இளைஞர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இருவரது சடலங்களும் யக்கல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளடன் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் கலன்பிந்துனுவெவ பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.