இந்திய விமான நிலையத்தில் இலங்கை யுவதியை விடுதிக்கு அழைத்த அதிகாரி; அதிர்ச்சியில் உறைந்த பெண்

Indicom Sri Lankan Peoples Sexual harassment Hyderabad
By Sulokshi Aug 06, 2025 03:42 PM GMT
Report

  இந்தியா ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தின் குடியேற்றப் பணியக ஊழியர் ஒருவர் மீது, விமான நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த 24 வயது பெண் பயணியை தன்னுடன் விடுதிக்கு வருமாறு தொந்தரவு கொடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விமான நிறுத்தத்தின் போது, இலங்கை யுவதியை முனையத்தை விட்டு வெளியேறி தன்னுடன் விடுதிக்கு வருமாறு பலமுறை அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலையத்தில் இலங்கை யுவதியை விடுதிக்கு அழைத்த அதிகாரி; அதிர்ச்சியில் உறைந்த பெண் | Lankan Woman Accuses Immigration Hyderabad Airport

இந்திய அதிகாரியின் மோசமான நடத்தை

ஓகஸ்ட் 3 ஆம் திகதி மாலை 5 மணியளவில் சத்தீஸ்கரை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தில் இளங்கலை இசைப் பட்டம் பயின்று வரும் 24 வயது இலங்கைப் பெண், கொழும்பிலிருந்து இண்டிகோ விமானம் 6E-1182 மூலம் சென்றபோது இச்சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

UK, France செல்லும் ஆசையில் வடக்கு இளைஞர் யுவதிகள்; புலம்பெயர் தமிழரின் உருட்டு அம்பலம்!

UK, France செல்லும் ஆசையில் வடக்கு இளைஞர் யுவதிகள்; புலம்பெயர் தமிழரின் உருட்டு அம்பலம்!

மாலை 4.30 மணிக்கு ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் சென்ற இலங்கை யுவதி , ராய்ப்பூருக்கு தனது அடுத்த விமானத்திற்கு காத்திருந்துள்ளார்.

அவர் 16 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டி இருந்ததால் தனது உடமைகளை எடுத்துக்கொண்டு, குடியேற்றப் படிவத்தில் தனது விவரங்களை நிரப்பி, குடியேற்ற கவுண்டரில் உள்ள அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்திய விமான நிலையத்தில் இலங்கை யுவதியை விடுதிக்கு அழைத்த அதிகாரி; அதிர்ச்சியில் உறைந்த பெண் | Lankan Woman Accuses Immigration Hyderabad Airport

இதன்போது விமான நிலையத்தில் தனியாக இருக்கிறீர்களா என அதிகாரி யுவதியிடன் கேட்டதுடதுன், அவரது எண்ணைக் கொடுத்து ஏதாவது உதவி தேவைப்பட்டால் அவரை அழைக்குமாறு கூறியதாக யுவதி முறைப்பாடு செய்துள்ளார்.

விவாகரத்துக்கு தயாராகும் நடிகை ஹன்சிகா மோத்வானி ; ரசிகர்கள் க்ஷாக்!

விவாகரத்துக்கு தயாராகும் நடிகை ஹன்சிகா மோத்வானி ; ரசிகர்கள் க்ஷாக்!

இதனையடுத்து மாலை 6.22 மணிக்கு, யுவதி விமான நிலையத்தில் காத்திருந்தபோது, குடியேற்ற அதிகாரி யுவதியை அழைத்து கார் நிறுத்துமிடத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வேலைக்கு செல்வதாக கூறி கொழும்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட இரு யுவதிகள்!

வேலைக்கு செல்வதாக கூறி கொழும்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட இரு யுவதிகள்!

அதோடு நகரத்தை சுற்றிக் காண்பிப்பதாகவும், பெண்ணின் உடமைகளை அவரது அலுவலகத்தில் வைத்துவிட்டுச் செல்லுமாறும் வலியுறுத்தினார். இரவு உணவிற்கு அழைத்துச் செல்வதாக அதிகாரி கூறியபோது பெண் மறுப்பு தெரிவித்ததால் , தொடர்ந்து போன் செய்து, ஓய்வெடுக்க ஒரு அறைக்குச் செல்லலாம் என்றும் வற்புறுத்தியதாக இலங்கை யுவதி கூறியுள்ளார்.

யுவதி விமானநிலைய பொலிஸில் முறைப்பாடு

அதிகாரியில் இந்த செயலால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, சம்பவம் தொடர்பில் நண்பரிடம் கூறியபோது அந்த நண்பர் விமான நிலைய போலீஸை அணுகுமாறு அறிவுறுத்தினார்.

பயங்கரவாத அச்சுறுத்தல் ; இந்திய விமான நிலையங்களுக்கு அதி உயர் பாதுகாப்பு!

பயங்கரவாத அச்சுறுத்தல் ; இந்திய விமான நிலையங்களுக்கு அதி உயர் பாதுகாப்பு!

அதன் பின்னர் திங்கட்கிழமை அதிகாலையில் ராஜீவ்காந்தி விமான நிலைய போலீஸில் எழுத்துப்பூர்வமாக இலங்கை யுவதி முறைப்பாடு அளித்தார். யுவதி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேக நபர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 78(1)(i) (பின்தொடர்தல்) இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்திய விமான நிலையத்தில் இலங்கை யுவதியை விடுதிக்கு அழைத்த அதிகாரி; அதிர்ச்சியில் உறைந்த பெண் | Lankan Woman Accuses Immigration Hyderabad Airport

குற்றம் சாட்டப்பட்டவரின் மொபைல் எண்ணின் அடிப்படையில், அவர் விமான நிலையத்தில் பணிபுரியும் குடியேற்றப் பணியக ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நாங்கள் ஆதாரங்களைச் சேகரித்து குற்றச்சாட்டுகளைச் சரிபார்த்து வருகிறோம்.

சட்ட நடைமுறைகளின்படி விசாரணை அதிகாரி முன் ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.   

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US