லொறியும் பேருந்தும் மோதி பேருந்து;பலர் பேர் காயம்
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே, இரட்டைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (4) வியாழக்கிழமை காலை 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. லொறி ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாவது இணைப்பு
25 பேர் காயம் - பலர்நிலை கவலைக்கிடம்
சிலாபம் – கொழும்பு வீதியில் மாதம்ப, கலஹிடியாவ பிரதேசத்தில் அரச பேருந்து ஒன்றும் சீமெந்து ஏற்றப்பட்ட லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விபத்தில் சுமார் 25 பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேவாலய சந்தியில் இருந்து சிலாபம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த அரசு பேருந்து ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி அதே திசையில் பயணித்த சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து நிகழும் போது அந்த பகுதியில் மழையுடன் கூடிய வானிலை நிலவியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.