யாழ்ப்பாணம் – கிளிநொச்சி பிரதான வீதியில் விபத்து ; 68 வயதான மூதாட்டி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி பிரதான வீதியின் புதுக்காடு பகுதியில், வீதியைக் கடந்து சென்ற மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதியதில் 68 வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்த விபத்து நேற்று (20) இடம்பெற்றுள்ளதாக பளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி, வீதியைக் கடந்து சென்ற மாட்டுடன் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதியும், முச்சக்கரவண்டியில் பயணித்த மூதாட்டியும் பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், மேலதிக சிகிச்சைக்காக இருவரும் கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், குறித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.