யாழில் இடம்பெற்ற கோர விபத்து: ஆபத்தான நிலையில் பிரதேச செயலக ஊழியர்
யாழ்ப்பாணம் - வெற்றிலைக்கேணியில் இன்று காலை (02-01-2023) நடந்த விபத்து ஒன்றில் இருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த விபத்து சம்பவத்தில், மருதங்கேணி பிரதேச செயலக ஊழியர் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
குறித்த ஊழியர் அணிந்திருந்த ஹெல்மெட்டின் பட்டி இணைக்கப்பட்டிருக்கவில்லையென்றும், ஹெல்மெட் கழன்று விழுந்ததை தொடர்ந்து விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்கரையிலிருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரும் பிரதேச செயலக உத்தியோகத்தரும் மோதி விபத்திற்குள்ளாகினர்.
ஆபத்தான நிலையிலிருந்த பிரதேச செயலக உத்தியோகத்தர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
உடனடியாக மேலதிக சிகிச்சைக்கான யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
காயமடைந்த மற்றையவரும் அங்கிருந்தவர்களால் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.