புத்தளத்தில் பாரிய விபத்து: போக்குவரத்து அதிகாரிக்கு நேர்ந்த விபரீதம்
முந்தல் பொலிஸ் நிலையத்திற்கு முன் இடம்பெற்ற வீதி விபத்தில் முந்தல் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வீதி விபத்தில் பல்லம பகுதியைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ. எம். ரம்பண்டா என்பவரே படுகாயமடைந்துள்ளதாக த்கவல் வெளியாகியுள்ளது.
குறித்த அதிகாரி பொலிஸ் நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே செல்ல முற்பட்ட போது, சிலாபத்திலிருந்து புத்தளம் பகுதி நோக்கிச் சென்ற பட்டா லொறியொன்று இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
இதையடுத்து, புத்தளத்திருந்து சிலாபம் நோக்கிப் பயணம் செய்த மற்றுமொரு சொகுசு கார் ஒன்றும் அதே சமயம் பொறுப்பதிகாரி மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இரு வாகனங்களும் ஒரே சந்தர்ப்பத்தில் மோதியதில் பொறுப்பதிகாரரி படுகாயமடைந்துள்ளார். அதனை அவனித்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த பொறுப்பதிகாரியின் நிலைமை மோசமடைந்து காணப்படுவதாகவும், அவரது உடலில் சில பாகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக சிலாபம் வைத்தியசாலை தகவல்கள் வெளியிட்டுள்ளன.
இவ் விபத்துடன் தொடர்புடைய இரு வாகனங்களின் சாரதிகளையும் முந்தல் பொலிஸாரால் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக புத்தளம் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.