நானு ஓயாவில் விபத்து; மோட்டார் சைக்கிள் மீது ஏறிய வான்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பங்கலாவத்தை பகுதியில் வேன் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளாகியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நுவரெலியாவிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த வேனும் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற நபர் படும் காயமடைந்த நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் ஆரம்ப சிகிச்சை வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பாக நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.