மட்டக்களப்பில் கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!
மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விபத்து சம்பவம் மட்டக்களப்பு சந்திவெளியில் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விபத்து குறித்து தெரியவருவது, செங்கலடி பிரதேசத்தில் இருந்து வாழைச்சேனை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியுடன், எதிரே வந்த கனரக வாகனம் நேருக்கு நேர் மோதியதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து சம்பவத்தில் கறுவாக்கேணியைச் சேர்ந்த 51 வயதுடைய து.விஜயநாதன் எனும் 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலும் குறித்த விபத்தில் காயமடைந்த இருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.