கொழும்பில் இடம் பெற்ற விபத்து ; பவுசர் சில்லுக்குள் தலை நசுங்கி இளைஞன் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பெற்றோல் பவுசரை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் பவுசர் சில்லுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த கோர விபத்து கொழும்பு கொலன்னாவ வீதியில் இன்று (24) முற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியில் பெற்றோல் பவுசர் பயணித்துக்கொண்டிருந்தது.
அதன்போது பின்னால் இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார்.

அப்போது குறித்த இளைஞன் பவுசரை முந்திச்செல்ல முற்பட்டு மோட்டார் சைக்கிளைச் செலுத்தியுள்ளார்.
அதன்போதே மோட்டார் சைக்கிள் சறுக்கிய நிலையில் இளைஞன், பவுசர் சில்லுக்குள் சிக்கி விபத்திற்குள்ளானார்.
விபத்தில் இளைஞனின் தலை பவுசரின் சில்லுக்குள் சிங்கி நசுங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இளைஞன் விபத்திற்குள்ளாகி பவுசரின் சில்லுக்குள் சிக்கும் காட்சி அங்கிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகி வெளிவந்து நெஞ்சை உலுக்கியுள்ளது.