பேராதனை பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்
கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வழமைபோன்று பல்கலைக்கழகங்களில் கற்கைகளை தொடர பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பேராசிரியர் குறிப்பிட்ட விடயம்
எனினும், தற்போது பல்கலைக்கழக கற்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மாணவர்கள் தற்போது பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் விரிவுரைகளிலும் பங்குபற்றுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வருடாந்த பட்டமளிப்பு விழாவும் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.