துஸ்பிரயோகத்திற்குள்ளான தனமல்வில சிறுமிக்கு அச்சுறுத்தல்!
தனமல்வில பிரதேசத்தில் 16 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் குறித்த சிறுமிக்கு, தான் பொலிஸ் அத்தியட்சகர் என கூறி வாக்குமூலம் பெற முயன்ற தொலைப்பேசி அழைப்போன்று கிடைக்கப்பட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் தலைமையகம் விசாரணை
இது தொடர்பில் அவரது பெற்றோர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பாடசாலை மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி ரிஜ்வே ஆர்யா வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.