பதின்மவயது சகோதரிகள் இருவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் , சிரிசரவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 14 மற்றும் 12 வயதுடைய சிறுமிகள் இருவரே துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளனர்.
ஐந்து சந்தேக நபர்கள்
இவர்களில் 14 வயது சிறுமி நான்கு நபர்களினால் பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள நிலையில் 12 வயது சிறுமி மற்றுமொரு நபரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் 24 முதல் 39 வயதுக்கு உட்பட்ட நான்கு சந்தேக நபர்கள் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர்கள் புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.