சைக்கிளிங் பயிற்சியால் ஏற்பட்ட அசாதாரண மாற்றம்; நிரூபித்துக்காட்டிய யாழ் துரை கோபிநாத்!

Jaffna Central Excise Day
By Sulokshi Aug 18, 2022 08:16 PM GMT
Report

  துரை கோபிநாத் யாழ்ப்பாணத்தின், காங்கேசன்துறை, தையிட்டி எனும் ஊரில் பிறந்து தனது ஆரம்ப கல்வியை யா/ நடேஸ்வரா கல்லூரி - காங்கேசன்துறை மற்றும் யா/ சிவப்பிரகாச மகா வித்தியாலயத்திலும் மேலும் யா/ தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் நிறைவு செய்தவர்.

தற்போது இவர் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நெல்லியடி பிராந்தியத்தின் பிராந்திய முகாமையாளராக கடமை புரிந்து கொண்டிருக்கின்றார். திரு.கோபிநாத் அவர்கள் என்றுமே விளையாட்டின் மீது அதீத ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர்.

பாடசாலைக் காலங்களின் பின்னரான காலங்களில் கூட பேட்மின்டன், நீச்சல், கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களை தனது உடற்பயிற்சிக்காகவும் போட்டிகளுக்காகவும் தொடர்ச்சியாக மேற்கொண்டிருந்தார்.

சைக்கிளிங் பயிற்சியால் ஏற்பட்ட அசாதாரண மாற்றம்; நிரூபித்துக்காட்டிய யாழ் துரை கோபிநாத்! | Abnormal Change Caused By Cycling Training

தனது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக மரதன் ஓடுவதை கைவிட வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டதன் பின்னர் பேட்மின்டன் விளையாடுவதிலும் காலில் ஏற்பட்ட உபாதை பெரும் சிரமங்களை அவருக்கு உண்டுபண்ணிய போதிலும் நீச்சலில் எனது ஆர்வத்தை முழுமையாக செலுத்தி வந்தார். இருந்தபோதிலும் வேலைப்பளு காரணமாக இதற்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரமும் படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் முழுமையாக உடற்பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்த நேரங்கள் குறைவடைந்த நிலையில் உடற் பருமன் அதிகரித்து தனது மொத்த நிறை 96 கிலோகிராம் ஆக இருந்ததை உணர்ந்தவர்.

சைக்கிளிங் பயிற்சியால் ஏற்பட்ட அசாதாரண மாற்றம்; நிரூபித்துக்காட்டிய யாழ் துரை கோபிநாத்! | Abnormal Change Caused By Cycling Training

உடற்பயிற்சிக்காக ஏதாவது ஒரு விளையாட்டை தினமும் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் சைக்கிளிங்கை தனது பயிற்சிக்கான விளையாட்டாக தேர்வு செய்தார். 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சாதாரண பாவனையிலுள்ள ஒரு துவிச்சக்கர வண்டியை தனது பயிற்சிக்காக சில மாற்றங்களோடு தேர்வு செய்து தினமும் மிதிவண்டியில் தனது பயிற்சியை தொடர்ந்தார்.

கொரோனாவால் முடக்கம்

அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில் உலகையே திருப்பிப்போட்ட கொரோணாத் தாக்கத்தின் காரணமாக முழு நாடும் முடக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே முடங்கி இருந்த நிலையில் தனது உடற்பருமன் மேலும் அதிகரித்து இருப்பதை உணர்ந்து இதன் பின்னரான காலங்களில் தினமும் சைக்கிள் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தார்.

சைக்கிளிங் பயிற்சியால் ஏற்பட்ட அசாதாரண மாற்றம்; நிரூபித்துக்காட்டிய யாழ் துரை கோபிநாத்! | Abnormal Change Caused By Cycling Training

சைக்கிளோட்டத்தின் போது தன்னில் ஏற்படத் தொடங்கிய மாற்றங்களை அவதானித்தவர். அதன் மீது தீராத காதல் கொண்டார். திரு. கோபிநாத் அவர்கள் தனது தேடல் காரணமாகவும் நண்பர்கள் மூலமாக கிடைத்த அறிவுரைகளின் மூலம் சைக்கிளிங் பயிற்சியின் அடுத்த தளத்திற்கு தன்னை நகர்த்தினார். மிதிவண்டி பயிற்சிக்காக மட்டுமல்லாது தேசிய ரீதியான போட்டிகளிலும் பங்கு பற்றுவதற்காக தன்னை தயார்படுத்த ஆரம்பித்தார்.

Road Bike

அதற்காக சாதாரண மிதிவண்டியில் இருந்து வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பாவனையிலுள்ளதுவும் போட்டிகளில் பொதுவாகப் பயன்படுத்தக்கூடியதுமான றோட் பைக் (Road Bike) என்று அழைக்கப்படக்கூடிய மிகவும் பாரம் குறைந்த காபன் எனும் உலோகத்தினாலான சைக்கிளை தனது பயிற்சிக்கும் போட்டிகளுக்குமாக தெரிவு செய்தார்.

சைக்கிளிங் பயிற்சியால் ஏற்பட்ட அசாதாரண மாற்றம்; நிரூபித்துக்காட்டிய யாழ் துரை கோபிநாத்! | Abnormal Change Caused By Cycling Training

வட-கிழக்கை மையமாக கொண்டு இயங்கி வரும் பதிவு செய்யப்பட்ட ரைடர்ஸ் ஹாப் சைக்கிளிங் கழகத்தின் வடக்குக்கான செயற்பாட்டாளர்களான இருவரில் ஒருவராக இயங்கி வருகின்றார். இதன் மூலம் வட கிழக்கில் விழிப்புணர்வு செயற்பாடுகள் மூலமாக மிதிவண்டியின் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள் அதன் பயன்கள் போன்றவற்றை தமிழ் பேசும் சமூகத்தின் இடையே ஊக்ககப்படுத்தியும் வருகின்றார்கள்.

இதுவரை சுமார் 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் எட்டியுள்ள திரு. கோபிநாத் அவர்கள் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடைபெற்ற றேஸ் த பேர்ல் (Race the pearl) எனும் சைக்கிள் அஞ்சலோட்டப் போட்டியில் தனது கழகம் சார்பாக கலந்து பருத்தித்துறை முதல் வவுனியா வரையான தூரத்தை ஐவரில் முதலாமவராக (சுமார் 154Km தூரத்தை) அஞ்சல் குழுவிற்காக ஓடினார்.

சைக்கிளிங் பயிற்சியால் ஏற்பட்ட அசாதாரண மாற்றம்; நிரூபித்துக்காட்டிய யாழ் துரை கோபிநாத்! | Abnormal Change Caused By Cycling Training

இப்போட்டி இலங்கையில் மிகவும் நீளமான 614Km தூரத்தை உடைய போட்டியாகும், இது பருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திரமுனை வரையானது, இதனை 24 மணித்தியாலத்திற்குள் கடந்துவிட வேண்டும் இதில் இவர்களது கழகம் பங்கேற்ற முதற்தடவையே ஐந்தாமிடத்தை தக்கவைத்துக் கொண்டது.

இங்கையின் முதலாவது மருத்துவ கல்லூரியான மானிப்பாய் கிரீன் மெமோரியல் வைத்தியசாலையின் புனருத்தாரண வேலைகளுக்காக நிதி திரட்டும் சைக்கிள் ஓட்டம் இவ்வருடத்தில் கடந்த 2022 பெப்ரவரி மாதம் நடைபெற்ற றைட் போர் சிலோன் (Ride for Ceylon) கலந்து கொண்டார். இந்த சைக்கிளோட்டம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான தூரத்தை திருகோணமலை, வவுனியாக ஊடாக 04 நாட்கள் கொண்ட பயணமாக மைந்திருந்தது இதில் சைக்கிளோட்டியாக கலந்து தனது பங்களிப்பைச் செய்திருந்தார்.

கடந்த மாதம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "பெட்ரோல் எமது வாழ்க்கையைத் தீர்மானிக்க முடியாது" என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற சைக்கிள் ஓட்ட விளிப்புணர்வுப் போட்டியில் ஏற்பாட்டாளர்கள் சார்பில் கலந்து கொண்டிருந்தார்.

சைக்கிளிங் பயிற்சியால் ஏற்பட்ட அசாதாரண மாற்றம்; நிரூபித்துக்காட்டிய யாழ் துரை கோபிநாத்! | Abnormal Change Caused By Cycling Training

அதுபோலவே தனது சைக்கிளின் மேலுள்ள தீராத் தாகத்தின் காரணமாக ஏனையோருக்கும் இதனை சென்றடையச் செய்யும் நோக்கில் நேற்று கொழுப்பில் இருந்து புத்தளம் ஊடாக யாழ்ப்பாணம் வரையான 401 கிலோமீட்டர் தூரத்தை 22 மணித்தியால மொத்த நேரத்தில் இயங்கு நேரமாக 14 மணி 45 நிமிடங்களில் பயணித்து யாழ்ப்பாணத்தை நள்ளிரவு மூன்று மணிக்கு அடைந்திருந்தாதார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எடை குறைப்பு

தனது உடல் எடையை குறைப்பதற்கான ஆரோக்கியத்தை நோக்கி ஆரம்பித்த சைக்கிளிங் பயணம் இன்று அவரை தேசிய ரீதியிலான சைக்கிள் ஓட்டிகளிடையேயான அவரது அடையாளமாகும்.

சைக்கிளிங் பயிற்சியால் ஏற்பட்ட அசாதாரண மாற்றம்; நிரூபித்துக்காட்டிய யாழ் துரை கோபிநாத்! | Abnormal Change Caused By Cycling Training

இந்த பயணத்தை ஆரம்பிக்கும் போது அவரது உடல் எடை 96 Kg இலிருந்தது. ஆனால் தற்போது 74 Kg ஆக குறைந்துள்ளதமை இவரது உழைப்பிற்கு கிடைத்த வெற்றியும் அங்கீகாரமுமாகும். சைக்கிள் ஓட்ட பயிற்சியானது சகல வயதினருக்கும் உகந்த ஒரு பயிற்சியாகும்.

இப்பயிற்சியானது தொற்றா நோய்களான சர்க்கரை நோய், இதய நோய்கள், குருதியில் கொழுப்பின் அளவு அதிகமாக காணப்படுதல், உயர் குருதி அழுத்தம், மூட்டு வருத்தங்கள் மற்றும் சிலவகை புற்றுநோய்களில் இருந்தும் எம்மை பாதுகாக்கின்றது என்பதே சைக்கிள் ஓட்டத்தின் மூலம் இவர் எமக்குச் சொல்லும் செய்தியாகும்.

மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US