பிரியங்காவை தூண்டிவிடும் அபிஷேக்: பிக்பாஸ் விட்டில் அடுத்து வரவுள்ள பிரச்சனை!
பிக் பாஸ் வீட்டில் iஇந்த வார புதிய தலைவர் பதவிக்கு போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பதில் பிரியங்கா மற்றும் தாமரை இருவருக்கும் நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த புகைச்சல் தற்போது வெளியான ப்ரோமோ விழும் எதிரொலிக்கிறது.
பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வந்த அபிஷேக் ராஜா வந்த முதல் இரண்டு நாட்களுக்கு அமைதியாக இருந்தார். தற்போது அவரின் சகுனி வேலையை பிரியங்காவிடம் ஆரம்பித்துள்ளார். அவர் பிரியங்காவிடம், நீ மற்றவர்களிடம் காட்டும் அன்பில் சில பேர் மட்டும் தான் உண்மையாக இருக்கிறார்கள்.
இதேவேளை, அவர்களை நீ விலைக்கு வாங்கிவிடலாம், ஜால்ரா என்றெல்லாம் உன்னை பற்றி தாமரை கூறுகிறார் என்று போட்டுக் கொடுக்கிறார். மேலும் இதையெல்லாம் கேட்கும் போது கேவலமாக இருக்கிறது. இந்த வாரமாவது உன்னுடைய வாய்ஸை காட்டுவதற்கு இதை பயன்படுத்திகோ என்று ஏற்றி விடுகிறார்.
பின்னர் பிரியங்கா என்னை பற்றி தாமரைக்கோ, மற்றவர்களுக்கோ நிரூபிப்பதற்காக நான் இங்கு வரவில்லை என்று சொல்ல. தன்னுடைய பேச்சு எடுபடவில்லை என்று தெரிந்த அபிஷேக் ராஜா உடனே அந்தர் பல்டி அடிக்கிறார். எனக்கு என்ன, நீங்க என்ன வேணாலும் பண்ணுங்க என்று பிரியங்காவிடம் கூறுகிறார். இவ்வாறு இன்றைய ப்ரோமோ காட்சி வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அபிஷேக் ராஜா பிரியங்காவின் மூலம் தனக்கு புகழைத் தேடிக் கொள்ள விரும்புகிறார். அதனால் இந்த மாதிரி கொளுத்திப் போடும் வேலையை செய்து வருகிறார். பிரியங்கா முன்பு போன்று இல்லாமல் தற்போது அபிஷேக்கிடம் சற்று உஷாராக இருந்து வருகின்றனர்.