கடற்கரையில் கைவிடப்பட்ட மூட்டைகள்; போதைப்பொருட்களா!
Matara
Sri Lanka Navy
Drugs
By Sulokshi
மாத்தறை, தலல்ல – நவதுன்ன கடற்கரையில் இன்று (24) காலை போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொருட்கள் அடங்கிய 10 மூட்டைகளும் 11 பயணப் பொதிகளும் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையும் இலங்கை கடலோரக் காவல்படையும் இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட மூட்டைகள் மற்றும் பயணப் பொதிகளில் உள்ள பொருட்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான மேலதிக விபரங்கள், ஓய்வுபெற்ற கடற்படை தளபதி அருண ஜயசேகர தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US