ஆடி மாதம் கடைசி வெள்ளி மட்டும் மறந்துடாதீங்க ; வீட்டில் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள்
ஆடி மாதத்தில் ஒரு சில விஷேச தினங்களும், திதிகளும் இருந்தாலும் ஆடி வெள்ளியும் ஆடி செவ்வாயும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை என்று தெரிந்தும் வழிபாடு செய்ய முடியவில்லை என்று வருத்தப்படுபவர்கள் மற்றும் ஆடி மாதத்தை நிறைவாக முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கடைசி வெள்ளியை மறந்து விடாதீர்கள்.
இந்த ஆடி கடைசி வெள்ளியில் எவ்வாறு வழிபட வேண்டும் என நாம் இங்கு பார்ப்போம்.
ஆடி மாதத்தில் ஒரு சில விஷேச தினங்களும், திதிகளும் இருந்தாலும் ஆடி வெள்ளியும் ஆடி செவ்வாயும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
அதுவும் அம்மனுக்கு உரிய ஆடி மாதத்தில் வீட்டில் சுமங்கலி பூஜை செய்தாலோ அல்லது திருமணமான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு உங்களால் இயன்ற அளவு தாம்பூலம் கொடுத்தாலோ உங்கள் இல்லம் சுபிட்சமாக மாறும் என்பது ஐதீகம்.
சுமங்கலி பூஜை
ஆடி மாதத்தில் ஒரு சில விஷேச தினங்களும், திதிகளும் இருந்தாலும் ஆடி வெள்ளியும் ஆடி செவ்வாயும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
அதுவும் அம்மனுக்கு உரிய ஆடி மாதத்தில் வீட்டில் சுமங்கலி பூஜை செய்தாலோ அல்லது திருமணமான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு உங்களால் இயன்ற அளவு தாம்பூலம் கொடுத்தாலோ உங்கள் இல்லம் சுபிட்சமாக மாறும் என்பது ஐதீகம்.
ஆடி மாதத்தில் சுமங்கலி பூஜை செய்வது அம்பாளை குளிர்விக்கும். ஒரு சில குடும்பங்களில் சுமங்கலி பூஜை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற ஒரு குறிப்பிட்ட வரைமுறை இருக்கிறது. சுமங்கலி பூஜைக்கென்றே பிரத்தியேகமாக விருந்து தயார் செய்வார்கள்.
ஒற்றைப்படை எண்ணிக்கையில் சுமங்கலி பெண்களை வீட்டுக்கு அழைத்து விருந்து அளித்து அவர்களுக்கு தாம்பூலம் கொடுப்பது வழக்கம்.
வசதி இருப்பவர்கள், தாம்பூலத்தில் கூடுதலாக, மருதாணி, தேங்காய், கண்ணாடி, சீப்பு, பழங்கள், ஜாக்கெட் துணி மற்றும் புடவை ஆகியவற்றை வைத்துக் கொடுக்கலாம்.
வீட்டுக்கு யாரையும் அழைத்து தாம்பூலம் கொடுக்க முடியாதவர்கள், தவறாமல் அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு சென்று, அர்ச்சனை செய்து, அம்மனுக்கு புடவை சாற்றலாம் அல்லது கோவிலில் உள்ள பெண்களுக்கு தாம்பூலம் வழங்கலாம்.
குத்து விளக்கு பூஜை
பெரும்பாலான அம்மன் கோவில்களில், ஆடி கடைசி வெள்ளியன்று நாள் முழுவதும் வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெறும். அதில், குத்து விளக்கு பூஜை நடைபெறும் அம்பாள் ஆலயத்தில் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.
ஆடி வெள்ளி விரதம்
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியன்று விரதம் இருப்பது மிகவும் சிறப்பானது. அம்மனின் அனுக்கிரகம் கட்டாயமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. விரதமிருப்பவர்கள், காலையில் அம்மனுக்கு விளக்கேற்றி, தீபாராதனை செய்து ஏதேனும் ஒரு பால் பாயசம் அல்லது சர்க்கரை பொங்கலை நைவேத்யம் செய்ய வேண்டும். அதன் பிறகு மாலையிலும் அதேபோல விளக்கேற்றி, பின்னர் விரதத்தை நிறைவேற்ற வேண்டும்.