யாழில் சகோதரியின் கணவரால் உயிரிழந்த இளைஞர்
யாழில் சகோதரியின் கணவர் உள்ளிட்ட கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட பகை காரணமாக தாக்குதல்
கடந்த 31ஆம் திகதி உயிரிழந்தவரின் சகோதரியின் கணவர் உள்ளிட்ட கும்பல் ஒன்று தனிப்பட்ட பகை காரணமாக தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
இதில் இளைஞன் படுகாயமடைந்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 34மற்றும் 31 வயதுடைய இருவரை கைது செய்துள்ள பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .