இலங்கை வந்த வெளிநாட்டு இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!
இலங்கைக்கு வந்த சுற்றுலா வந்த வெளிநாட்டு இளம் பெண் ஒருவர் ராவணன் எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்காக பாறையில் ஏறும்போது கால் தவறி கீழே விழுந்து பலத்த காயங்களுக்ககு உட் பட்டுள்ளதாக எல்ல பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலில் இருந்து சுற்றுலா பயணியாக இலங்கைக்கு வந்திருந்த 23 வயது இளம் பெண்ணே இவ்வாறு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
12 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்காக வந்திருந்த குறித்த பெண் நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு ஏற முயன்றபோது கால் தவறி பத்தடி பள்ளத்திற்குள் வீழ்ந்துள்ளார்.
இதன் காரணமாக பலத்த காயங்களுக்கு உட்பட்டிருந்த பெண்ணை வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் பெண்ணின் உடல் நிலை மோசமாக இருந்ததனால் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.