பெண் ஒருவரை தேடிச்சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
மரத்தின் உச்சியில் பரண் ஒன்றை அமைத்து போதைப்பொருள் விற்பதாக கிடைத்த தகலின் அடிப்படையில் வெயாங்கொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பெள் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹெரோயின், தேசிய அடையாள அட்டைகள், வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன் சந்தேக நபரான் அகுடும்ப பெண் கைது செய்யப்பட்டதாக வெயாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அடையாள அட்டைகள், வெளிநாட்டு கடவுச்சீட்டுகள்
சம்பவத்தில் வெயாங்கொட மாரபொல பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
1 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின், 6 தேசிய அடையாள அட்டைகள், 5 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் 8 கையடக்கத் தொலைபேசிகளும் சந்தேக நபரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணையில் சந்தேக நபர் தனது வீட்டை ஒட்டியுள்ள வனப்பகுதியில் உள்ள பெரிய மரத்தின் உச்சியில் மரத்தடிகள் மற்றும் பலகைகளால் ஆன பரண் ஒன்றை அமைத்து வைத்து யாரும் கண்டு கொள்ளாத வகையில் வகையில் போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.