மட்டக்களப்பில் வீடொன்றிலிருந்து மர்ம முறையில் குடும்பப் பெண் ஒருவர் சடலமாக மீட்பு

Batticaloa Sri Lanka Police Investigation Crime Death
By Sahana Sep 25, 2024 04:54 AM GMT
Sahana

Sahana

Report

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை 4 ஆம் பிரிவு பாலர் பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பப் பெண் ஒருவர் சடலமாக செவ்வாய்க்கிழமை (24) மாலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காணொளி எடுப்பதற்கு தடையாக இருந்த 18 மாத குழந்தையை கொன்ற தாய் கைது

காணொளி எடுப்பதற்கு தடையாக இருந்த 18 மாத குழந்தையை கொன்ற தாய் கைது

இவ்வாறு மீட்கப்பட்டவர் 44 வயதுடைய சசிகுமார் கௌரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த வீட்டில் கணவன் மனைவி ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர். எனினும் கணவன் மனைவி இருவருக்கும் இடையிடையே தகராறுகள் இடம்பெற்று வருவதாக அயலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் வீடொன்றிலிருந்து மர்ம முறையில் குடும்பப் பெண் ஒருவர் சடலமாக மீட்பு | A Woman S Body Recovered From A House Batticaloa

குறித்த குடும்பப் பெண் தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். சம்பவதினமான செவ்வாய்க்கிழமை தனது மகள் வேலைக்குச் சென்றுள்ளார் என நினைத்துக் கொண்டு அவரது தாயார் உயிரிழந்த மகளின் தொலைபேசிக்கு பலதடவை அழைப்பெடுத்துள்ளார்.

எனினும் அவரது தொலைபேசி இயங்கவில்லை. உயிரிழந்த பெண்ணின் சகோதரன் தனது அக்காவின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. ஆனாலும் அக்காவின் செருப்பு வீட்டின் முன்னால் கிடந்துள்ளன.

விசாரணை

சந்தேகம் கொண்ட சகோதரன் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்ததற்கு இணங்க வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது படுக்கையிலே இரத்தத்தில் தோய்ந்த நிலையில் தனது அக்கா இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

மட்டக்களப்பில் வீடொன்றிலிருந்து மர்ம முறையில் குடும்பப் பெண் ஒருவர் சடலமாக மீட்பு | A Woman S Body Recovered From A House Batticaloa

சம்பவ இடத்திற்கு விரைந்த களூவாஞ்சிகுடி பொலிசார், மட்டக்களப்பு குற்றத் தடுப்பு பிரிவினர், கைரேகை தடயவியல் பிரிவினர், உள்ளிட்ட பலரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் சடலத்தைப் பார்வையிட்ட களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.றஞ்ஜித்குமார் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்குப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளார்.

குறித்த பெண் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் அவரது கணவரையும் தேடி வருகின்றனர்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US