நேரத்தை வீணடிக்கும் அரசியல்வாதிகளின் தேனீர் சந்திப்பு !
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பும் கலந்துரையாடலொன்றும் இன்று புதன்கிழமை (07/10/2026) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் காணப்படும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிக் குறைப்பாடுகள் மற்றும் சுகாதாரம், கல்வித் துறைகளில் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்தும் இக்கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டன.

குறிப்பாக, தரமான சுகாதார சேவைகளுக்கான அணுகல், பாடசாலைக் கல்வியில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் குழந்தைகளின் போசாக்கு நிலைமை குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர்களான வீ. இராதாகிருஷ்ணன், டாக்டர் இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து ஸ்ரீநேசன், டாக்டர் இராமநாதன் அர்ச்சுனா, கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, எம். எஸ். உதுமா லெப்பே, பத்மநாதன் சத்தியலிங்கம், முஜிபுர் ரஹ்மான் மற்றும் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.