மோட்டார் சைக்கிளில் வந்தவரை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி; நேர்ந்த கதி
வவுனியா- ஓமந்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தவரை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி ஒன்று மோதித்தள்லையதில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நெடுங்கேணியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற முச்சக்கரவண்டி, ஓமந்தை பகுதியில் வைத்து வீதியின் மறுபக்கமாக திருப்பியபோது வவுனியாவில் இருந்து ஓமந்தை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியான ஓமந்தை மருதோடையை சேர்ந்த 30 வயதுடைய கமல்ராஜ் நபர் , படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.