12 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பதின்ம வயது சிறுவன்
புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவா , பெல்வத்தை பகுதியில் 12 வயதுடைய சிறுவனை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 14 வயதுடைய சிறுவன் புதன்கிழமை (07) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இரு சிறுவர்களும் ஒரே பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே பாடசாலையில் கல்வி கற்று வருபவர்கள் என்பதுடன் 12 வயதுடைய சிறுவன் , சந்தேக நபரான சிறுவனின் வீட்டிற்கு சென்றிருந்த போது இச் சம்பவம் நடந்துள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து கைதான சந்தேக நபரான சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.