மரக்கறிகளின் விலைகள் திடீரென அதிகரிப்பு
நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ளது.
கடந்த நாட்களில் 100 ரூபாவிற்கு குறைவாக விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகள் இன்று 300 முதல் 500 ரூபாவைக் கடந்துள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை
அந்தவகையில் மரக்கறி விற்பனை நிலையங்களில் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 550 முதல் 750 ரூபாய் வரையிலும், ஒரு கிலோகிராம் கறி மிளகாய் மற்றும் மிளகாய் 500 முதல் 650 ரூபாய் வரையிலும், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 350 முதல் 500 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளது.
அத்துடன், ஒரு கிலோ கிராம் கரட் 460 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் வெண்டைக்காய் 500 ரூபாவிற்கும், இஞ்சி ஒரு கிலோ 3,500 ரூபாவிற்கும், தேசிக்காய் ஒரு கிலோ 1,800 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளதால் மரக்கறிகளின் விலைகள் நாடளாவிய ரீதியில் இவ்வாறு மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.