மட்டக்களப்பில் கரை ஒதுங்கும் ஒருவகை கறுப்பு நிற மீன்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் ஒருவகை மீனினம் நேற்று (29) மாலை முதல் இன்றுவரை கரை ஒதுங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையம், மாங்காடு மற்றும் குருக்கள்மடம் உள்ளிட்ட பல இடங்களிலும் இவ்வாறு மீன்கள் கரை ஒதுங்குவதை அப்பகுதி கடற்றொழிலாளர்கள் அவதானித்துள்ளனர்.
சிறிய அளவிலான கறுப்பு நிற மீனினமே இவ்வாறு கரை ஒதுங்கி இறந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு பின்னர் சிறிய ஊம்பல் மீன்கள் கரை ஒதுங்குவதாக மீனவர்களும் பொது மக்களும் தெரிவிக்கின்றனர்.
காலநிலை மாற்றம் மற்றும் கடலில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் காரணமாக இந்த சிறிய ஊம்பல் மீன் கரை ஒதுங்குவதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.